புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டுமான பணி தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் அருணா தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. சின்னத்துரை, கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஒன்றியத்தலைவர் மாலா ராஜேந்திர துரை, பேரூராட்சி தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா ஆத்தியடிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆய்வு நடத்தினார். மாணவர்களிடம் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து ஆய்வு செய்தார். அந்த கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி தூய்மை பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.