2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50 மணிக்கு சபைக்கு வந்தார். முன்னதாக தமிழக முதல்வரை, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பட்ஜெட் அறிக்கை குறித்து ஆலோசித்தார்.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் கூறி சட்டமன்ற கூட்டத்தை தொடங்கி வைத்து நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறினார். அதைத்தொடர்ந்து தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதம் இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அதிமுகவினர் ஈரோடு இடைத்தேர்தல்
ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை எனக்கூறி கூச்சல் போட்டனர். அதிமுகவினர் கூறும் எந்த கருத்தும் அவைக்குறிப்பில் ஏறாது. அமைதியாக இருங்கள். பட்ஜெட்டை கவனித்து அதன் நிறை குறைகளை கூறுங்கள் என சபாநாயகர் கூறினார். பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30ஆயிரம் கோடியை குறைத்துள்ளோம். வரும் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
வரும் நிதி ஆண்டில் பல பொருளாதார சவால்கள் நிறைந்திருக்கிறது. அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி வரும் ஆண்டில் மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
வயது முதிர்ந்த மேலும் 591 தமிழ் அறிஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்ப்படும்.
இலங்கை தமிழகர்களு க்கு 3,959 வீடு கட்ட ரூ.223 கோடி ஒருக்கப்படும்
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
25 இடங்களில் நாட்டுப்புற கலை பயறிச்சி அமையங்கள் ஏற்படுத்தப்படும்.
211 தொழிற்சாலைகளில் மக்களைத்தேடி மருத்துவம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
கிண்டியில் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். தமிழக பள்ளிகளில் புதிய வகுப்பறை, ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கப்படும்.
தொடர்ந்து அவர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.