Skip to content
Home » லால்குடியில் ரூ.5கோடியில் பாலம்…..எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் ஆய்வு

லால்குடியில் ரூ.5கோடியில் பாலம்…..எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் ஆய்வு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அகலநல்லூர் -முத்துராஜபுரம் செல்லும் சாலையில் உப்பாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு இந்த பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது உப்பாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தில் ரூ 5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பாலம் கட்டும்  பணிகளை லால்குடி சவுந்தரபாண்டியன் எம் எல் ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் கோட்ட பொறியாளர் வடிவேல், லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் பிரபாகர், உதவி பொறியாளர் கிஷோர், ஒன்றிய செயலாளர்கள் சண்முகநாதன், சக்திவேல்,ஒன்றிய கவுன்சிலர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் தாண்டவன், முன்னாள் தலைவர் அர்சுணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!