திருச்சி வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால், நேற்று முன்தினம் இடிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சாலையின் பிரதான பகுதி மூடப்பட்டு மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது மிகவும் முக்கியச்சாலை என்பதால், போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, பாதிப்பாலம் இடிக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக, மீதியிருந்த பாலப்பகுதியிலும் விரிசல் ஏற்பட்டதையடுத்து. இதனால் வேறு வழியின்றி நேற்று முன்தினம் இரவு பாலம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல், மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. அந்த
வயர்லெஸ் சாலைக்கு நிரந்தர மாற்று வழியாகவும், விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகர், அண்ணாநகர், அம்பிகை நகர், பாரதி நகர் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட நகர்களுக்கு செல்லும் வழியாகவும் மேலும் கே கே நகர் பகுதியை அடைந்து மன்னார்புரம் செல்லும் மாற்றுப்பாதை அமைக்க கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழைய விமான நிலையம் எதிரே உள்ள விமான நிலைய குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள டி மார்ட் இடையில் செல்லும் சாலையை அகலப்படுத்தி காமராஜர் நகர் செல்லும் வகையில் நிரந்தர மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் மாநகராட்சியில் கிடப்பில் உள்ளது. டி மார்ட் அருகே செல்லும் (இதே) வாய்க்காலின் மேல் ஒரு பாலம் அமைத்தால் மாற்றுப்பாதை எளிதாகும். இப்பாதையை ஏற்கெனவே அமைந்திருந்தால் தற்போது வயர்லெஸ் சாலைக்கான மாற்றுப்பாதையாக இது அமைந்திருக்கும் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.