மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து தஞ்சாவூர் கோர்ட் வளாகம் முன்பு திமுக வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மணவழகன் தலைமை வகித்தார். மூத்த வக்கீல்கள் அமர்சிங் பாலாஜி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் ஆகியவற்றால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல்கள் பூங்கோதை,பாலகிருஷ்ணன் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.