ஆச்சராமான இந்து பிராமணக் குடும்பத்தில் பிறந்த இளம் பெண் செஃப் ஆக வேண்டும் என்ற தனது கனவை போராடி அடைவது அன்னபூரணி திரைப்படத்தின் கதை. திருச்சி ஸ்ரீரங்கம் அக்ரகாரத்தைச் சேர்ந்த நயன்தாரா, புத்தகத்தின் நடுவில் சிக்கன் சிக்ஸ்டிபைவின் படத்தை மறைத்து வைத்துப் பார்க்கும் படத்தின் முதல் டீசரே சர்ச்சையானது. இந்நிலையில், சிவசேனா நிர்வாகி ரமேஷ் சோலங்கி படத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறியுள்ளார்.
அதில், ‘இந்துப் பெண்ணான நயன்தாரா புர்கா அணிந்து, நமாஸ் செய்த பின் இறைச்சி சமைக்கும் காட்சியையும், ராமர் குறித்து நடிகர் ஜெய் பேசியிருக்கும் வசனத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, இதுவொரு இந்து விரோதப் படம் என குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் லவ் ஜிகாத்தை இப்படம் விளம்பரம் செய்வதாகவும் புகார் கூறியுள்ளார்.
அதன்படி, நயன்தாரா உள்ளிட்ட அன்னபூரணி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரப்பிரதேச டிஜிபி மற்றும் மும்பை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓடிடி தளத்திலிருந்து அதாவது NETFLIX-ல் இருந்து அன்னப்பூரணி படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.