தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பேசினார். அவர் பேசும்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 9ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது என்றார்.