திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெருங்சலக்குடி கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி அலுவலர் செல்வி.பவித்ரா கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்,கிராம முன்னேற்ற குழு கூட்டம் , வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் ,தமிழ் மண்வளம் செயலி பயன்படுத்துதல் ,மண் மாதிரி சேகரிப்பு அவசியம் மற்றும் மண் மாதிரி அடிப்படையில் உர நிர்வாகம் அளித்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சபரிச் செல்வன் அட்மா திட்ட செயல்பாடுகள் ,விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் பற்றி விளக்கி கூறினார் .கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் உழவன் செயலி பயன்பாடுகள் விளக்கி கூறி உழவன் செயலி பதிவிறக்கம் செய்து கொடுத்து விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் சுயவிவர புகைப்படத்தை eKYC செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இக்கூட்டத்தில் நெருஞ்சலக்குடி கிராமத்தை சார்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர் .
