நேபாளத்தின் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், “2 கைக்குழந்தைகள் உட்பட 67 பேர் விமானத்தில் இருந்தனர்.மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷியர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் (2), அர்ஜென்டினா, பிரான்ஸ் தலா ஒருவர் என மொத்தம் 67 பயணிகளும் விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 5 பேரும் விமானத்தில் பயணித்ததாக கூறி உள்ளார் இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து நேபாளத்தில் நாளை தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
