Skip to content
Home » செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராமத்தில் உள்ள செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (03.05.2023) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள்
தெரிவித்ததாவது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராம எல்லையில் ஆரம்பமாகி 2,500 மீட்டர் நீளமுடன் மாத்தூர் எரியில் முடிவடைகிறது. இதன்மூலம் 88.02 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும்.

மேற்கண்ட வடிகால் வாய்க்கால் மிகவும் தூர்ந்தும், பக்க சரிவுகளில் மண் மேடிட்டும், காட்டாமணக்கு செடி கொடிகள் வளர்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைந்து வடிவதற்கு தடை ஏற்படுகிறது. இந்நிகழ்வால் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இவற்றை தவிர்க்கும் பொருட்டு, செங்கலநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் இயந்திரம் மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் திரு.சு.சொர்ணராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.க.சண்முகம், உதவிப் பொறியாளர் திரு.இரா.செந்தில்குமார், ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி.சசிகலா கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.சரிதா மேகராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திரு.உத்தமநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!