நெல்லை மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்தமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்.