நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில் 4 பேர் அதிமுக, ஒருவர் சுயேச்சை. மற்ற அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்.
திமுகவில் உள்ள 40 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயரை மாற்ற வேண்டும் என அமைச்சர் நேருவிடம் முறையிட 2 பஸ்களில் திருச்சி வந்தனர். இந்த நிலையில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமாக மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது முதல்வர் ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். நாளை இரவு அவர் சென்னை திரும்புகிறார். எனவே சனிக்கிழமை மேயர் ராஜினாமா விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படும் என தெரிகிறது.