நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா(18) என்ற பெண் வேலை செய்து வந்தார். இன்று மதியம் அவர் கடையில் இருந்து குடோனுக்கு சென்று பொருட்கள் எடுத்து வர நடந்து சென்றார். அப்போது சந்தியாவை பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் சந்தியாவை சரமாரி வெட்டிக்கொலை செய்தார். பொதுமக்கள் கண்முன் இந்த கொடூர சம்பவம் நடந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்ததில் அந்த வாலிபர் யார் என தெரியவந்தது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
