தமிழ்நாட்டில் இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்தார். அதன்படி நெல்லை டிஐஜி மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக மாற்றப்பட்டார். நெல்லை மாநகர ஆணையர் சந்தோஷ் ஹதிமணி டிஐஜி பணியிடத்தையும் கூடுதலாக கவனிப்பார்.
ஈரோடு எஸ்.பி ஜவஹர் சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டார். ஈரோடு எஸ்.பியாக சுஜாதா நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் திருப்பூர் துணை கமிஷனராக இருந்தார்.