நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 12ம் தேதி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த தயார் நிலையில் இருந்தனர். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நெல்லை மாநகர ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் மாமன்ற கூட்ட அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை. அரைமணி நேரம் ஆகியும் எந்த ஒரு கவுன்சிலரும் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனை மாநகராட்சி ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். போதிய கோரம் இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது, இந்த நிலையில் மேயர் சரவணன் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையேயான மோதல் தொடந்து வந்தது. இந்த நிலையில் நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/07/நெல்லை-மேயர்.jpg)