Skip to content
Home » கரூர் நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு….. விவசாயிகள் வேதனை….

கரூர் நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு….. விவசாயிகள் வேதனை….

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி நெல் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது நெல் கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்காக தயாராகும் நேரத்தில் கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் சுமார் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்களாக பெய்த மழையின் ஈரப்பதத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்தன. தற்போது நெற்கதிர் மணிகள் தற்போது முளை விட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும்

மனவேதனை அடைந்து ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை செலவு செய்தும் அறுவடை செய்யும் நேரத்தில் பெய்த மழையின் காரணமாக மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் விட்டு புலம்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டுமென நங்கவரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!