திருச்சி மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா,பிரதீப்குமார் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில், பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500/-(ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) எனவும், டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.1700/- (ரூபாய் ஆயிரத்து எழுநாறு மட்டும்) எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு வழங்கும் ரசிதியில் அறுவடை இயந்திரம் ஓடிய நேரம் மற்றும் தொகையினை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வாடகை விலையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கிவரும் 9342712122 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், அந்தநல்லூர், திருவெறும்பூர். மணிகண்டம், மணப்பாறை, மருங்காப்பூரி,வையம்பட்டி வட்டார விவசாயப் பெருமக்கள் திருச்சி உதவி செயற் பொறியாளர்(வே.பொ) கைபேசி எண். 9942112882 அவங்களையும், இலால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர் வட்டார விவசாயப் பெருமக்கள் இலால்குடி, உதவி செயற் பொறியாளர்(வே.பொ) கைபேசி எண், 9842435242 அண்களையும், முசிறி, தொட்டியம், தாத்தையங்காபேட்டை, துறையூர், உப்பிலியபுரம் வட்டார விவசாயப் பெருமக்கள், முசிறி, உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (பொறுப்பு) கைபேசி எண். 9842435242 அவர்களையும் மற்றும் செயற்பொறியாளர்(வே.பொ.), திருச்சி கைபேசி எண் 8072296624 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.