திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் சொந்தமாக நெல் அறுவடை மிஷின் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவருடைய நெல் அறுவடை மிஷின் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெல் அறுவடை மிஷினில் பின்பக்கம் தீ பற்றியது. உடனடியாக நெல் அறுவடை மிஷினிலிருந்து டிரைவர் கீழே குதித்தார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீப்பற்றி எரிந்த நெல் அறுவடை மிஷினின் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் நெல் அறுவடை மிஷின் முற்றிலும் சேதமானது. இந்நிலையில் 10 லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.