Skip to content

நெய்குளத்தில் ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள  நெடுங்கூர் தண்ணி பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நெய்க்குளம் சர்வே எண் 126/2. 5.64 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தனிநபர் ஆக்கிரமித்தும் கரையில் இருந்த விநாயகர் சிலை, இரண்டு நாகசிலைகள் புதைத்து ஆலமரம், அரசமரம், வேப்பமரம் ஆகிய மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளார்கள். இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெய்க்குளம் பொதுமக்கள் சார்பில் மகிழ்ச்சி மக்கள் நல அறக்கட்டளையின் இணை இயக்குனர் வழக்கறிஞர் நேச மனோகர் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!