Skip to content
Home » நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

  • by Senthil

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எந்த அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது?

உச்ச நீதிமன்றம் கூறியது போல அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும். ஒரு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன விதிமீறல் செய்தது என்ற எந்த விபரமும் நோட்டீசில் இல்லை.

நெய் சோதனையில் குஜராத் ஆய்வகம் கொடுத்த அறிக்கைக்கும், சென்னை கிங்க்ஸ் ஆய்வக அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. சென்னை ஆய்வில் கலப்படம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசு நிறுவனம்தான் என நீதிபதி தெரிவித்தார். மத்திய அரசானது அந்நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அளிக்க வேண்டும். பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!