முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை தலைமையில் நிர்வாகிகள் கண்டோன்மெண்டில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகனாம்பாள்,லால்குடி நகரத் தலைவர் ஆனந்தன்,மாவட்ட செயலாளர் ஆனந்த்,இளைஞர் காங்கிரஸ் பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.