இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. 1563 பேருக்கு தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பலர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
கருணை மதிப்பெண்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு மறுதேர்வு எழுத உத்தரவிட்டது. அதன்படி 1563 பேருக்கு நேற்று மறுதேர்வு நடந்தது. அனால் அதில் 50 சதவீதம் பேர் நேற்று மறுதேர்வு எழுத வரவில்லை.
மறுதேர்வு எழுத வராதவர்களிடம், ஏன் மறுதேர்வு எழுத வரவில்லை என சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.