அரியலூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை குறித்த பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராமகிருஷ்ணன்…
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மத்திய அரசை கண்டித்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது அரியலூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்கி மக்களை பிரித்து தான் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது.
அரசியல் சட்டத்தை பாதுகாப்பது ஜனநாயகம் மத சார்பின்மை சுயசாப்பின்மை முதன்மையாக வைத்து இந்திய கூட்டணி பாஜகவிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
பாஜக தோற்கடிக்க வேண்டும் என்பதே இந்திய கூட்டணியின் முக்கிய குறிக்கோளாகும் மாநிலக் கட்சிகளுக்கிடையே மாநிலத்திற்கு மாநிலம் கருத்து வேறுபாடு இருக்கலாம்.
தமிழ்நாட்டு மக்களிடையே நீட் தேர்வு கூடாது என்று எண்ணம் பரவி உள்ளது இது அரசியல் சார்பான பிரச்சனை அல்ல தமிழ்நாடு மக்களின் பிரச்சனையாக உள்ளது நீட் தேர்விற்கு எதிராக ஆளுகின்ற திமுக அரசே கடுமையாக பாடு பட்டு வருகிறது.
பாஜக அதிமுகவுடன் கூட்டணி என்றால் நீட் தேர்வு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜகவை நிர்பந்தம் செய்யலாம் ஆனால் அது குறித்து எதுவும் தெரிவிக்காது வருத்தம் அளிக்கிறது.
காவேரி பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு காவிரியில் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இதில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என கூறினார்.