சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விடுதி வார்டன் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
