திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த இயக்கம் குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்தது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டது. அதை பாஜக பிடித்துக்கொண்டது. நீட் என்பது எப்படி சரியான மருத்துவரை உருவாக்கும் என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று நிருபர்களுக்கு அமைச்சர் மனோராஜ் பேட்டியில் கூறியதாவது… எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது. நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு.
வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும் இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. திமுக ஆன்மிகவாதிகளுக்கு எதிரான இயக்கம் என்று கூறுவது அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ளார்.