Skip to content

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. கலவரம் காரணமாக மணிப்பூர் மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!