நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தி்லும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நீட் தோவை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களையும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் குண்டுகட்டாக பிடித்து கைது செய்தனர்