மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்(மார்க்சிய கம்யூ), ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் ரத்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி முர்மு பதில் அளித்து உள்ளார். அதில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் சட்ட மசோதா மத்திய உள்துறையன் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறி உள்ளார்.