தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிய நீங்கள் நலமா ?என்ற திட்டம் பொதுமக்களை சென்று சேர்ந்ததா என்று அவ்வப்போது தொலைபேசி வாயிலாக முதல்வரே ஆய்வு செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் இன்று சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ராதிகா என்ற பயனா ளிக்கு காணொளி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு அவருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதா, சரியான தேதியில் பணம் வருகிறதா என கேட்டார். இத்திட்டத்தின் மூலமாக கிடைக்கும் பணம் குடும்ப சூழலுக்கு பயன்படுகிறாரா என கேட்டார்.
அப்பொழுது ராதிகா தங்களது திட்டத்தால் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை எனது மகனின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி என்று தெரிவித்துதார்.
இதனை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் ரூபாயினை எந்த மருத்துவ செலவிற்காக பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்ட பொழுது, தனது ஏழு வயது உள்ள மகனான மதன்ராஜ் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மருத்துவ செலவிற்காக தான் இந்த ஆயிரம் ரூபாய் தொகையை செலவிடுவதாகவும் கூறினார்.
மருத்துவ செலுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்றும், மகனின் மேல் சிகிச்சைகளுக்காக தனக்கு நிதி உதவி வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் ராதிகா முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து உடனடியாக அவரின் மருத்துவ சிகிச்சைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உடனடியாக ராதிகாவிற்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவை தொடர்பு கொண்டு உடனடியாக ராதிகாவின் இல்லத்திற்கு சென்று அவரது மகன் மதன்ராஜன் மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், அரசின் சார்பில் வழங்கப்படும் லட்ச ரூபாய்க்கான காசோலையை உடனே வழங்கவும் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவ ம் திட்டகுழுவினர் கோவிந்தபுரத்தில் உள்ள ராதிகாவின் வீட்டிற்கு விரைந்து சென்று, மதன்ராஜ்ன் மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்து அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ராதிகாவை உடனடியாக அழைத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை ராதிகாவிடம் வழங்கினர். மேலும் மதன்ராஜ் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆறுதல் தெரிவித்துள்ளார் . ராதிகாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விசாரித்த பொழுது தான் கூலி வேலை பார்த்து வருவதால் அன்றாட செலவிற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், தனக்கு தையல் வேலை நன்கு தெரியும் என்றும், தனக்கு தையல் இயந்திரம்
வழங்கினால் தனது மகனின் மருத்துவ செலவுகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கும் என்று ராதிகா மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
இதனை அடுத்து உடனடியாக பிற்பட்ட நலத்துறையில் சார்பில் ராதிகாவிற்கு தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீ ஸ்வர்ணா வழங்கினார். ஒருபுறம் முதலமைச்சர் தொலைபேசியில் பேசியதன் வாயிலாக தனது மகனின் ரத்தப் போற்று நோய் சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் கிடைத்த மகிழ்ச்சி, மறுபுறம் நேரில் மாவட்ட ஆட்சியர் விசாரித்த பொழுது தனது எதிர்கால வாழ்க்கைக்காக கிடைத்த தையல் இயந்திரம் என இரட்டிப்பு மகிழ்ச்சி ஒரே நாளில் கிடைத்ததால் ராதிகா முதல்வரின் கருணையான நடவடிக்கையால் திக்குமுக்காடி நெகிழ்ந்து போனார். 7 வயது நிரம்பிய இரண்டாம் வகுப்பு படித்து வரும் மதன் ராஜன் மருத்துவ செலவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் தொடர்ந்து வழங்கப்படும் என்ற உத்தரவாதித்தால் ராதிகாவின் குடும்பத்தினர் தற்பொழுது மன நிம்மதி அடைந்துள்ளனர். முதல்வர் போனில் தொடர்பு கொண்ட 3 மணி நேரத்தில் இத்தனை உதவிகள் கிடைத்ததால் அந்த குடும்பத்தினர் மட்டுமல்ல, அந்த கிராமமே மகிழ்ச்சி அடைந்துள்ளது.