நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி 10 காட்டு யானைகள் வந்துள்ளன. இதில் ஒரு குட்டியுடன் கூடிய தாய் யானை திரும்பிச் சென்று விட்டதால், 8 காட்டு யானைகள் மட்டும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை நஞ்சப்பசத்திரம், காட்டேரி பூங்கா என்ன சுற்றித்திரிந்து, குன்னூர் நகரப் பகுதியான கன்னி மாரியம்மன் கோயில் தெருவுக்குள் புகுந்தன.
இதையடுத்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர்கள் ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன், முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் நேற்று இரவும், பகலும் முயற்சி செய்து 8 காட்டு யானைகளை குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு அருகே சாலையைக் கடத்தினர்.

யானைகள் சாலையைக் கடந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்