கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகபட்சமாக 104 டிகிரியை தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை
முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளரும், மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், இளநீர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.