நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் , கீழே விழுந்து நொறுங்கி விபத்தானது. காத்மண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது கீழே விழுந்து நொறுங்கிய சவுரியா ஏர்லைன்ஸ் விமானம். இதில் விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. அப்பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.