அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு காரணமாக முன் விரோதம். இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சங்கருக்கு சொந்தமான இடத்தில் உள்ள புளியமரத்தில் ராஜேந்திரன் குடும்பத்தினர் புளி உலுக்கியுள்ளனர். இதனால் சங்கர் மற்றும் ராஜேந்திரன் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கவுண்டன், கவிதா ஆகிய மூவரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சங்கர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.
