கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அவரது மனைவியும் சனிக்கிழமை மாலை உக்கடம் மேம்பாலத்தில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கழுத்தில் நூல் ஒன்று சிக்கியதால் வாகனம் ஓட்டத்தில் நிலைத்தடுமாறி வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார். பின்னர் கழுத்தில் சிக்கிய நூலை கையில் எடுத்த போது ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலில் கிழித்து ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து காவல்துறை உதவி எண் 100 க்கு அழைத்து செய்து இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து மேம்பாலம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பட்டம் விடுவதை கண்காணித்து நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.