டில்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவுப்பெற்றது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் தே.ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே காலையில் 17வது லோக்சபாவை கலைக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று லோக்சபாவை ஜனாதிபதி கலைத்தார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்றே பிரதமர் மோடி சந்தித்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.