’கனெக்ட்’, ‘அன்னபூரணி’ என அடுத்தடுத்து தொடர் தோல்வியால் சோர்ந்து போயிருக்கிறார் நடிகை நயன்தாரா. தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இவரது படங்கள் இவருக்கு நஷ்டத்தையே கொடுத்திருக்கிறது. இதற்கிடையில், என்னதான் ‘ஜவான்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி இவருக்கு ஆறுதல் கொடுத்திருந்தாலும் அடுத்து இவரது கைவசம் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இல்லை.

சின்ன பட்ஜெட் படம், புதுமுக இயக்குநர் படம் என கைவசம் வைத்திருக்கும் நயன்தாராவுக்கு ஆறுதலாக அமைந்த விஷயம் பிரபாசுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ‘கண்ணப்பா’ என்ற பான் இந்திய படத்தின் கதாநாயகி என்பதுதான். ஆனால், அந்த வாய்ப்பும் இப்போது பறிபோயிருக்கிறது.

காஜல் அகர்வால்
அக்ஷய் குமார் வந்ததால் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நீக்கிவிட்டு நடிகை காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதனால், கடும் அப்செட்டில் இருக்கிறாராம் நயன்.
இழந்த தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ‘கண்ணப்பா’ கைகொடுக்கும் என எதிர்பார்த்திருந்தவருக்கு படக்குழுவின் இந்த முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.