லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அதில் தான் நடிக்கும் கேரக்டர் வித்யா ருத்ரன் என்று பதிவு செய்து, படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது ’டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், மலையாளத்தில் உருவாகி வரும் ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கும் நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா ருத்ரன் என்ற கேரக்டரில் ‘டியர் ஸ்டூடன்ஸ்’ படத்தில் நடித்து வருவதாக கூறி, அது குறித்த புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.