சமீபத்தில் நடிகை சமந்தா தவறான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ். வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide Nebulisation) எனப்படும் சிகிச்சையை பயன்படுத்துவதாக நடிகை சமந்தா (Samantha) தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
எந்த வித மருத்துவ அறிவும் இல்லாமல் ஆயிரக் கணக்கான மக்களுக்கு தவறான ஆலோசனை வழங்கிய சமந்தாவை கைது செய்ய வேண்டும் என்று ஃபிலிப்ஸ் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வு பெரியளவில் சர்ச்சையாகி ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை நயந்தாராவை டாக்டர் ஃபிலிப்ஸ் விமர்சித்து பதிவிட்டுள்ளார்
சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொடர்ச்சியாக செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும் தனது ரசிகர்களையும் செம்பருத்தி டீ குடிப்பதை பரிந்துரைத்திருந்தார். சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு செம்பருத்தி டீ நல்லது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்த டிப்ஸை தனக்கு தனது ஊட்டச் சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் பரிந்துரைத்ததாக அவரை பாராட்டியிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவை விமர்சித்து டாக்டர் ஃபிலிப்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் “ செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோ நயன்தாரா நிறுத்தியிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதோடு நிற்காமல் செம்பருத்தி டீயின் மருத்துவ குணத்தைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்டவை எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மைகளே. இந்த பதிவு அவரது ஊட்டச்சத்து நிபுணரை ப்ரோமோட் செய்யும் நோக்கத்திற்காகவே அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதால் ஆண் மற்றும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகை நயன்தாரா ஆயுர்வேத மருத்துவ முறையே வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் என்கிற புரிதலில் பல்வேறு போலியான தகவல்களை பகிர்ந்துள்ளார். “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவைத் தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்டாவில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார்.