திருச்சி அடுத்த நவலூர்குட்டப்பட்டு புனித அந்தோணியார் ஆலயம் அருகே இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 740 காளைகள் கொண்டு வரப்பட்டது. 450 வீரர்கள் பங்கேற்றனர்.
ஏற்கனவே காளைகள் பரிசோதிக்கப்பட்டு இருந்தது. அதுபோல வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்பட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு முதன் முதலாக கோயில் காளை வாடிவாசல்
வழியாக மைதானத்தில் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக களம் இறக்கப்பட்டது. பெரும்பாலான காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி சீறிப்பாய்ந்து சென்றது.
அடக்க முயன்ற வீரர்களை சில காளைகள் முட்டி தள்ளியதில் 10 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை வரை போட்டிகள் நடைபெறும். போட்டியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உள்ளனர்.