மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள், பூமாலைகள் காய்ந்து வீணாவதைத் தடுக்கும் வகையிலும், ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள மாமரம் உள்ளிட்ட மரங்களின் இலைகள், மரக்கழிவுகளை மறுசுழற்சி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கும் வகையில் தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம் புதிதாக நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ரூ.20 லட்சம் மதிப்பீட்டில நிறுவப்பட்ட இந்த மறுசுழற்சி இயந்திரத்ததை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று திறந்து வைத்தார். முன்னதாக, அவர் மறுசுழற்சி இயந்திரத்துக்கு தீபாராதனை காட்டி வழிபாடு மேற்கொண்டு, பூக்கள் மற்றும் மரக்கழிவுகளை இயந்திரத்தில் இட்டு மறுசுழற்சி பணிகளை தொடக்கி வைத்தார். தினந்தோறும் வீணாகும் பூக்கள் மற்றும் மரக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..
- by Authour
