மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் பல்வேறு பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது:-
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆன்மிகம், கலைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி பாராட்டினார். முதல் நாள் நிகழ்ச்சி திருக்கோவிலூர் பாலாஜி குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. கோவை ஸ்ரீநாட்ய நிகேதன் மாணவிகள் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற தலைப்பில் நிகழ்த்திய பரதம், சென்னை கிருஷ்ணா நாட்டிய பள்ளி குரு ஷோபனாவின் மாணவிகள் நடத்திய நாட்டிய நிகழ்ச்சி, மயிலை சப்தஸ்வரங்கள் மாணவிகள் நிகழ்த்திய ராமாயணம் நாட்டிய நாடகம், வாலஜா லாஸ்யா பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டர் மாணவர்களின் பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் உள்ளுர், மறறும் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்வுகள்’ நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.