மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான 53வது தேசிய அளவிலான மகளிர் ஹாக்கிபோட்டிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டாம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது.
நாடுமுழுவதும் இருந்து 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டது, இதில், திருச்சி கேந்திரிய வித்யாலயாஅணி கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியதுடன், இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர்
அணியை 4 -2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
தங்கம் வென்று, ரயில்மூலம் திருச்சிவந்த வீராங்கனைகளுக்கு, ஜங்ஷன் ரயில்நிலையத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிநிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
51வது தேசிய அளவிலான ஹாக்கிபோட்டியில் வெண்கல பதக்கமும், 52 வது தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம்வென்ற திருச்சி அணி வீராங்கனைகளின் தொடர் முயற்சியினால், கடினமான உழைப்பினாலும் தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவிகள் கிடைக்கும்பட்சத்தில் பிற்காலத்தில் அவர்கள் சிறந்த ஹாக்கி வீராங்கனைகளாக வலம்வருவதுடன், போட்டிகளில் வென்று தமிழகத்திற்கு பெருமைசேர்ப்பார்கள் என ஹாக்கி பயிற்சியாளர் கோபி தெரிவித்தார்.