மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக 3-வது முறையாக அஜித் தோவல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.