Skip to content

திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.

திருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154 நாய்கள் கலந்துகொண்டன.

பொம்மேரியன், டூடுல், ஜெயின் பெர்னாட், சௌசௌ, ஸ்பேனியல், லேபரடார் என வித்தியாசமான வெளிநாட்டு இன நாய்களும், ராமநாதபுரம் மந்தை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கண்ணி,கோம்பை உள்ளிட்ட நாட்டின நாய்களும் கலந்து கொண்டன.

நாய்களின் உடல் கட்டமைப்பு , கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம், நாய்களின் உடல் தகுதி வயதுக்கேற்ப வளர்ச்சி நிறம் மற்றும் பராமரிப்பு

போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு இனங்களிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டன.

மிரளவைக்கும் பிரம்மாண்டமான நாய்களையும், அச்சுறுத்தும் நாட்டு நாய்களையும், அழகு கொஞ்சம் கையடக்க நாய்களையும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டெல்டா கென்னல் கிளப் தலைவரும் வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் ராஜவேலு செய்திருந்தார்

error: Content is protected !!