வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக மாறுகிறது. அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக இப்போதே தமிழகத்தில் மழை கொட்டுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த மாவட்டங்களில் முன்னேற்பாடாக தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து தலா 30 வீரர்கள் என தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மொத்தம் 150 பேர் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்கள் எந்த இடத்தில் மழை சேதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறதோ அங்கு முகாமிடுவார்கள்.