திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு :- சிறந்த நடிகைக்கான விருதை முறையே ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘மிமி’ படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர். ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடனம் : ஆர்ஆர்ஆர்( பிரேம் ரஷித்) சிறந்த சண்டை பயிற்சி: ஆர்ஆர்ஆர் ( கிங் சாலமன்) தொழில் நுட்பம் : ஆர்ஆர்ஆர் ( ஸ்ரீனிவாஸ்) கருவறை ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்தார் உதம் சிறந்த இந்தி படமாகவும், செலோ ஷோ சிறந்த குஜராத்தி படமாகவும், 777 சார்லி சிறந்த கன்னட படமாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. சிறந்த பிண்ணனி பாடகிக்கான பிரிவில் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் “மாயவா தூயவா” பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த தமிழ்படம் – ‘கடைசி விவசாயி’ (மணிகண்டன்)