Skip to content
Home » தேசிய கீதம் குறித்து கவர்னருக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது

தேசிய கீதம் குறித்து கவர்னருக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது

கவர்னர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து  தேசிய கீதம் குறித்து கவர்னர்  தனது எக்ஸ்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.  இது தொடர்பாக  பேரவையில் முன்னவர்  அமைச்சர் துரை முருகன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் அவர் கூறியதாவது:  ஆண்டின்  தொடக்க கூட்டத்தில் கவர்னர்  உரையாற்ற வேண்டும்  என்று மட்டும் தான் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முந்தைய ஆண்டுகளில் செய்ததை போலவே இப்போதும் கவர்னர்  செய்திருக்கிறார்.    தேசிய கீதம்  பாடப்படுவது குறித்து ஏற்கனவே  சபாநாயகர் விளக்கம் அளித்து உள்ளார்.  100 ஆண்டு  வரலாறு கொண்ட இந்த  சபையின்  பாரம்பரியம் எப்போதும் காபபாற்றப்பட்டு வருகிறது.   அதன் மரபு காப்பாற்றப்படுகிறது. தேசிய கீதம் மற்றும் அரசமைப்பு மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை கொண்டு உள்ளது. 2023ல்  கவர்னர் உரையில்  இல்லாத  பகுதிகளை   படித்தார். 24ல்  முழுமையாக படிக்கவில்லை.  பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.  கவர்னர் பதவி உள்ளவரை அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவர்  கருணாநிதி.   தேசிய கீதம் குறித்து ஏற்கனவே கடந்த முறை   கவர்னருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் உள்நோக்கம் என்ன என்பது புரிகிறது.

இவ்வாறு தீர்மானத்தை  படித்தார். பின்னர் அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

கவர்னர்  கூறிய கருத்துக்கள் சபை குறிப்பில் இடம் பெறாது.  கவர்னர் உரையில் உள்ள பகுதிகள் மட்டுமே இடம் பெறும்.

இவ்வாறு  சபாநாயகர் கூறினார்.  அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.