கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏறத்தாழ 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்து விட்டதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன.
இது குறித்து வனத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் காட்டுத் தீ பரவி வரும் அப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தீயை அணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டறிந்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.