புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர் நாசர் ஆவார். இவர் அண்மையில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைத்துவகை வேடங்களிலும் சிறப்புற நடித்தவர். இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் . செங்கல்பட்டு தட்டான்மலையில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து திரையுலகினர் நாசரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.