மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக ரங்கம்மா சத்திரம் நரிக்குறவர் காலனியில் உள்ள அவரது குழந்தைகளுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச் செல்வி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு தாரகை இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கி தந்தார் 70க்கும் மேற்பட்டநரிக்குறவ குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. மகாராஜா பேக்கரி அருண் இனிப்புகள் வழங்கி தந்தார் நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் கவிதா ராஜசேகர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் முன்னாள் தலைவர்கள் சுபா கருணாநிதி, சித்ரா ராமதாஸ், உறுப்பினர்கள் கலாவதி, மாரிக்கண்ணு, சூர்யாகலா, சங்கீதா கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியின் திட்ட இயக்குனராக முன்னாள் தலைவர் பவானி சொக்கலிங்கம் தொடர் சேவை செய்து வருகிறார்.
